tag:blogger.com,1999:blog-8702987.post110613938694442614..comments2023-08-20T06:44:32.029-05:00Comments on பங்குச்சந்தை: அள்ள அள்ளப் பணம்தமிழ் சசி | Tamil SASIhttp://www.blogger.com/profile/09129170303688014282noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8702987.post-1106144855257954142005-01-19T09:27:00.000-05:002005-01-19T09:27:00.000-05:00நன்றி. உங்கள் விமரிசனங்கள் சரியானவையே. இந்தப் புத்...நன்றி. உங்கள் விமரிசனங்கள் சரியானவையே. இந்தப் புத்தகத்தில் இணையம் வழி விற்பனையைப் பற்றி அதிகமாக ஒன்றும் சொல்லவில்லை. அதற்குக் காரணம் இந்தப் புத்தகத்தின் வாசகர்கள் முடிந்தவரை புரோக்கர்கள் வழியாக வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்பதே. அதாவது இணைய வசதி இல்லாத இடங்களிலும் பயன்பட வேண்டும் என்பதே.

இணையம் வழி பங்கு வர்த்தகத்துக்கு என்று ஒரு தனிப்புத்தகம் வேலை நடந்து கொண்டிருக்கிறது.

BTST - நீங்கள் சொல்வது சரியே. இதை அடுத்த எடிஷன்களில் சரி செய்து விடுகிறோம். இதுவும் பொதுவாக தெருமுனை புரோக்கர்கள் வழியாகக் கிடைப்பதில்லை.

அடிப்படை வகையில் பங்குகளை வாங்குவது (மார்க்கெட் எந்த நிலையில் இருந்தாலும்) பற்றி அதிகமாக இந்தப் புத்தகம் ஒன்றும் சொல்லவில்லை என்பதும் உண்மையே. அதையும் அடுத்த எடிஷனில் சரி செய்து விடுகிறோம் - சில உதாரணங்கள் மூலம்.

டிரேடிங் பற்றி அதிகமாக இந்தப் புத்தகத்தில் சொல்லப் போவதில்லை. அதைத் தனியாக கவனிக்க வேண்டும் என்பது எண்ணம். ஒருவேளை பின்னிணைப்பாக வேண்டுமானால் ஒரு சாப்டர் தரலாம்.

பிறரது கருத்தைக் கேட்டு - என்னும்போது இங்கு speculation பற்றித்தான் சொல்கிறோம். Fundamental அல்லது Technical Analysis செய்து ஒரு Research Analyst சொல்வதைப் பற்றி தவறாக எதுவும் சொல்வதில்லை. இதையும் சற்றே விரிவாகச் சொல்லியிருக்கலாம்.

அடுத்த எடிஷன் இன்னமும் நான்கு மாதத்தில் வரும். அதில் இவற்றை சரியாகக் கவனித்து விடுகிறோம். உங்களது மதிப்புரைக்கு நன்றி.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.com