பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Saturday, August 11, 2007

ஒரு சாமானியனின் பொருளாதாரக் குறிப்புகள் - 1

ஏற்றுமதியும், இந்திய நாணயமும்

இந்திய நாணயம் உயரும் பொழுதெல்லாம் இந்திய நாணயம் உயருவது இந்திய ஏற்றுமதிக்கும், பொருளாதாரத்திற்கும் உகந்தது அல்ல என்ற வாதம் இந்தியாவின் வணிக ஊடகங்களில் முன்வைக்கப்படுவது உண்டு. இந்திய நாணயத்தின் மதிப்பு குறைவாக இருந்தால் இந்தியப் பொருள்களின் மதிப்பு உலகச்சந்தையில் மலிவாக கிடைக்கும். அதனால் இந்திய ஏற்றுமதி உயரும், பொருளாதாரம் உயரும் என்பதே அந்த வாதத்தின் பொருளாதார அடிப்படை.

பொருளாதார நியதிகளைக் கொண்டு பார்த்தால் அந்த வாதம் சரியாக இருந்தாலும் இந்திய சூழலில் இது சாமானிய மனிதனுக்கு எந்த வகையிலும் நன்மையை கொடுக்காது. நாணயத்தின் மதிப்பை குறைவாக வைத்து ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டுமென்றால் உள்நாட்டு உற்பத்தியை பெருக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்தி அதிகமாகும் பொழுது அதன் மூலமாக ஏராளமான பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். உள்நாட்டு உற்பத்தி அதிகமாகிறது என்றால் பலருக்கு வேலைவாய்ப்பும், பொருளாதார வசதிகளும் அதிகரிக்கிறது என்பது பொருள். அவ்வாறு செய்யும் பொழுது இந்திய நாணயத்தின் மதிப்பை குறைவாக வைத்து ஏற்றுமதி மூலம் கிடைக்கும் மிகுதியான வருவாய் இந்திய சமூகத்தில் இருக்கும் பல சாமானிய மக்களுக்கும் சென்று சேரும் வகையில் செய்ய முடியும்.

ஆனால் இந்தியாவில் அதுவா நடக்கிறது ?

இந்தியாவின் ஏற்றுமதி அதிகம் தரும் தொழில்கள் என்று பார்த்தால் அது சர்வீஸ்ஸ் எனப்படும் மென்பொருள், ஜவுளி போன்ற தொழில்களே. இந்த தொழில்களில் ஈடுபடுவோர் குறைவு. இந் நிலையில் இந்த சொற்பமான எண்ணிக்கையில் இருப்பவருக்காக ரூபாய் மதிப்பை குறைத்து வைப்பது அதிக அளவிளான லாபத்தை இந்த தொழில்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கே கொண்டு சேர்க்கிறது. அதனால் தான் இந்தியாவில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்கள் நல்ல லாபத்தை பெறுகின்றன. அந்த மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கும் நல்ல சம்பளம் கிடைக்கிறது. காரணம் அவர்களின் ஊதியம் இந்திய ரூபாயில் அல்லாமல் அமெரிக்க டாலர்களிலேயே நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு ஊழியர் ஒரு மணி நேரம் வேலைப் பார்த்தால் ஒரு தொகை நிர்ணயம் செய்யப்பட்டு நிறுவனங்கள் அதில் ஒரு சிறிய பங்கினை ஊழியர்களுக்கு அளிக்கிறது. இவ்வாறு செய்யும் பொழுது ரூபாய் மதிப்பு மிகவும் குறைவாக இருப்பதால் நாணயமாற்று விகிதப்படி ஊழியர்களுக்கு நிறைய சம்பளம் கிடைக்கிறது.

இது சமூகத்தில் ஒரு பகுதியினருடைய சம்பளத்தை மிகவும் அதிகமாகவும், பெரும்பான்மையானவர்களின் சம்பளத்தை அதே அளவிலுமே வைத்திருக்கிறது. இந்திய ரூபாயை ஒரு கட்டுக்குள் வைத்து ஏற்றுமதிக்கு வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கம் இதனால் இந்தியாவின் பெரும்பான்மை மக்களை சென்றடையாமல் ஒரு சிறிய பிரிவினரையே சென்று சேருகிறது.

ஆனால் உள்நாட்டு உற்பத்தியினை பெருக்கும் வகைகளை ஏற்படுத்தி உற்பத்தியை பல்வேறு துறைகளிலும் பரவலாக்கும் பொழுது அதனால் எழும் ஏற்றுமதி வாய்ப்பே அனைத்து பிரிவு மக்களையும் சென்று சேருவதாக அமையும்.

ரூபாய் மதிப்பு குறைவாக இருந்தால் இந்திய ஏற்றுமதிக்கு நல்லது என்பது பொருளாதாரத்தின் அடிப்படை என்றால் உற்பத்தி பரவலாக்கப்படாமல் ரூபாய் மதிப்பை குறைப்பது பண முதலைகளுக்கே பணத்தை மேலும் பெருக்க வசதியை ஏற்படுத்திக் கொடுக்கிறது என்பதும் பொருளாதாரத்தின் அடிப்படையே.

ஆனால் இந்தியாவில் இருக்கும் பண முதலைகளும், பங்குச்சந்தைகளும் பொருளாதாரத்தின் ஒரு அடிப்படையை முன்னிறுத்தி மற்றொன்றை உதாசீனப்படுத்துகின்றன. காரணம் இவர்களுக்கு சாமானிய மக்கள் மீது எந்தக் கவலையும் இல்லை.

பொருளாதாரத்தை தட்டையாக ஆராய முடியாது. அது பலப் பரிமாணங்களைக் கொண்டது. பணவீக்கத்தையும் அதன் தக்கத்தையும் பலப் பரிமாணங்களைக் கொண்டே ஆராய வேண்டும்.

பொருளாதாரத்தை முழுமையாக கம்யுனிசப் பார்வையில் பார்க்க முடியாது. அதேப் போன்று இந்தியா போன்ற மக்களின் வாழ்க்கைத்தரங்களில் கடுமையாக ஏற்றத்தாழ்வு இருக்கும் நாடுகளில் முழுமையாக அமெரிக்கா பாணியில் முதலாளித்துவ நாடாக, பன்னாட்டு நிறுவனங்களுக்கு முழுமையாக கடைவிரிக்கவும் முடியாது. சாமானிய மக்களை சென்றடையும் வகையிலான பொருளாதார தேவைகளே அவசியமாகிறது.

நான் பொருளாதார நிபுணன் அல்ல. பொருளாதாரம் ஓரளவிற்கு படித்த ஒரு சாமானியன். பொருளாதாரத்தை ஒரு சாமானியனின் பார்வையில் எப்படி பார்க்க முடியும் என்னும் ஒரு சிறு முயற்சியே இந்த தொடர் கட்டுரை முயற்சி. இதனை தொடர் என்று கூட கூற முடியாது. அவ்வப்பொழுது படிக்கும், தோன்றும் சில பொருளாதாரக் குறிப்புகளை இவ்வாறு பதிவு செய்ய உத்தேசித்துள்ளேன்.

பணவீக்கம் குறித்த விரிவான குறிப்புகள் அடுத்த பகுதிகளில் வரும்...

20 மறுமொழிகள்:

மாசிலா said...

அருமையான கட்டுரை கொடுத்திருக்கிறீர் தமிழ் சசி. நல்ல விளக்கம். நிறைய விசயங்கள் அறிந்து கொண்டேன்.

சீனர்கள் இந்த விசயத்தில் மிகவும் கவனமாகவும் சில ஏமாற்று வேலைகளையும் செய்து வருவதாக அமெரிக்கா சில வாரங்களுக்கு புகார் விட்டுக்கொண்டிருந்தது. அதாவது சீனர்கள், வேண்டுமென்றே ஏற்றுமதி இறக்குமதி கணக்குகளை தில்லுமுல்லு செய்து தனது நாணயத்தின் மதிப்பை ஏறவிடாமல் ஏமாற்றி வந்ததாம். அதே சமயத்தில்தான் இந்தியாவில் அதற்கு எதிரான செய்தியாக, நாணயத்தின் மதிப்பு உயர்ந்து விட்டதாக படித்தேன். இதில் அமெரிக்கர்களின் சூதாட்டம் நிறைய இருக்குமென நம்புகிறேன்.

உங்கள் கருத்து?

நன்றி.

4:52 PM, August 11, 2007
தென்றல் said...

வாழ்த்துக்கள், சசி!

/ மாசிலா said
சீனர்கள்.....
தனது நாணயத்தின் மதிப்பை ஏறவிடாமல் ....
/
உண்மைதான்! ஆனால், "ஏற்றுமதி இறக்குமதி கணக்குகளை தில்லுமுல்லு செய்து.." என்ற செய்தி எந்தளவு உண்மை என்று தெரியவில்லை!

5:20 PM, August 11, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

மாசிலா, தென்றல்,

நன்றி

நீங்கள் தற்பொழுது சீனாவுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே நடந்து வரும் சில வர்த்தகப் பிரச்சனைகளை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையேயான வர்த்தகத்தில் அமெரிக்காவின் trade deficit மிக அதிகம். அதாவது அமெரிக்கா அதிகளவில் சீனப் பொருட்களை இறக்குமதி செய்கிறது. காரணம் சீனாவின் நாணயம் மிக குறைவாக உள்ளது. சீனப் பொருட்கள் அமெரிக்காவில் மலிவாக கிடைக்கின்றன.

சீனா தன் வசம் மிக அதிக அளவில் அந்நியச்செலவாணி வைத்துள்ளது. சீனாவிடம் அமெரிக்க கடன்பத்திரங்களும் அதிகளவில் உள்ளது. இதன் காரணமாக சீனாவின் நாணயத்தை குறைத்து வைத்திருக்க முடிகிறது. எல்லா நாடுகளுமே தங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க இவ்வாறு செய்வது வழக்கம்.

இது குறித்த என்னுடைய முந்தைய பதிவு - 2005ல் எழுதப்பட்டது - http://stock.tamilsasi.com/2005/04/vs-1.html

அமெரிக்கா சீனாவிடம் தன் நாணயத்தை உயர்த்தும்படி கூறுகிறது. சீனா மறுப்பது மட்டுமில்லாமல் அமெரிக்கா தொடர்ந்து இதனை வலியுறுத்தினால் அமெரிக்கா கடன்பத்திரங்களை விற்று விடுவோம் என மிரட்டியுள்ளது. சுமார் 400 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன்பத்திரங்களை சீனா விற்றால் அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விடும்.

சீனாவிற்கும் இதனால் பாதகம் உண்டு. எனவே சீனா நிச்சயம் இதனைச் செய்யாது.

ஆனால் உன்னுடைய குடுமி என்னிடம் உள்ளது என சீனா மிரட்டும் நிலையில் தான் தற்போதைய நிலை உள்ளது

இது குறித்து பிறகு விரிவாக எழுதுகிறேன்

6:47 PM, August 11, 2007
வவ்வால் said...

சசி ,

நல்லப்பதிவு கடந்த ஆண்டு வேறு யாரோ ஒருவரும் இது குறித்து பதிவிட்டார , அப்பொது நீங்கள் குறிப்பிட்ட , சீனாவின் நாணய மதிப்பால் அமெரிக்க சங்கடம் குறித்து தான் நாணும் பின்னூட்டம் போட்டேன் ,எனக்கு எந்த அளவு வசமாக மாட்டி இருக்கிறது என சரியாக தெரியது , தற்போது 400 பில்லியன் கடன் பத்திரம் என துல்லியமாக சொல்லியுள்ளீர்கள்.

இதற்கு முன்னர் இந்தியாவின் நாணயத்தின் மதிப்பை நாம் குறைக்கும் போதெல்லாம் அது அமெரிக்க அரசின் வற்புறுத்தலால் தான் எனப்பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதுவார்கள்.ஆனால் தற்சமயம் முதல் முறையாக மேல் நோக்கி செல்கிறது நம் நாணய மதிப்பு.

இந்த "full rupee convertibility " சாத்தியக்கூறுகள் பற்றியும் சொல்லுங்களேன்!

7:26 PM, August 11, 2007
வெற்றி said...

சசி,
உலக அரசியல் பொருளாதார நிலைமைகளை விரும்பிப்படிப்பவன் எனும் முறையில், உங்களின் இத் தொடர் மூலம் பல தகவல்களை அறியக் கூடியதாக இருக்குமென நம்புகிறேன்.

/* பொருளாதாரத்தை முழுமையாக கம்யுனிசப் பார்வையில் பார்க்க முடியாது. அதேப் போன்று இந்தியா போன்ற மக்களின் வாழ்க்கைத்தரங்களில் கடுமையாக ஏற்றத்தாழ்வு இருக்கும் நாடுகளில் முழுமையாக அமெரிக்கா பாணியில் முதலாளித்துவ நாடாக, பன்னாட்டு நிறுவனங்களுக்கு முழுமையாக கடைவிரிக்கவும் முடியாது */

உண்மை.

9:24 PM, August 11, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

வவ்வால், வெற்றி,

நன்றி

நாணயம், பணவீக்கம் குறித்து எழுதும் பொழுது full capital account convertibility குறித்து எழுதும் எண்ணம் இருக்கிறது. இதற்கு முன்பு பத்ரி வலைப்பதிவுகளில் சிறு குறிப்பு ஒன்றினை இது குறித்து எழுதினார் என்று நினைக்கிறேன்

9:35 PM, August 11, 2007
வடுவூர் குமார் said...

ஏதோ,புரிந்த மாதிரியும் இருக்கு,புரியாதது மாதிரியும் இருக்கு.படித்துவைத்துக்கோள்கிறேன்,எப்போதாதவது உபயோகப்படும்.
தமிழ் சசி... ஒரு புள்ளி தான் வித்தியாசம்,வலைப்பூவில் எவ்வளவு வித்தியாசம்.ஒரு நொடி கவனிக்காவிட்டால் உள்ளே நுழையாமலே போயிருப்பேன்.

12:09 AM, August 12, 2007
பெத்தராயுடு said...

நல்ல கட்டுரை.
தொடர்ந்து எழுதுங்கள்.

- பெத்தராயுடு

12:58 AM, August 12, 2007
மாசிலா said...

எனது சந்தேகங்களுக்கு அருமையாக விளக்கமளித்ததற்கு மிக்க நன்றி.

தொடர்ந்து எழுது வாருங்கள்.

10:22 AM, August 12, 2007
assortZ said...

சசி,

தாங்கள் தொடர்ந்து பதிவிடாத போதும், நான் அடிக்கடி தங்கள் வலைப்பக்கத்தை எட்டிப்பார்ப்பது வழக்கம்.

எப்பொழுதும் போல் எளிமையான ஆனால் ஆழமான பதிவு!

ராதாகிருஷ்ணன்

2:44 AM, August 16, 2007
N Senthil Kumar said...

நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

5:32 PM, August 19, 2007
Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

dear sasi,
please write a detailed post about sub prime lending and its effects.and the HIDE too.though we read about them in newspaper, your posts are quite clear and informative.
expecting your posts.
karthik amma

1:07 AM, August 25, 2007
சதுக்க பூதம் said...

We are going to buy petrol in dollar(Which is our major import).If rupee value increased over dollar,price of petrol will go down.SO that price will be cheaper for normal people

1:01 AM, September 01, 2007
சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<--
சதுக்க பூதம் said...
price of petrol will go down.
-->
Yes.But,Govt wont bring down the petrol price =)
Importer(crude,machine,etc) gets benefits.But,those billing in dollars are affected such IT,textiles/garments. Atleast, IT companies manage,but,Garment exporters are badly hit. As per newspaper reports,lakhs of labours lost their jobs due to this.

12:48 AM, October 31, 2007
arkr said...

மிகவும் அருமை !எனக்கு கொஞ்சம் உங்களிடம் பேச வேண்டும்
முடிந்தால் மெயில் அனுப்பவும் kng_rr@yahoo.com
nanri!!!!

12:28 PM, February 10, 2008
Santhosh Selvarajan said...

"இவ்வாறு செய்யும் பொழுது ரூபாய் மதிப்பு மிகவும் குறைவாக இருப்பதால் நாணயமாற்று விகிதப்படி ஊழியர்களுக்கு நிறைய சம்பளம் கிடைக்கிறது.

இது சமூகத்தில் ஒரு பகுதியினருடைய சம்பளத்தை மிகவும் அதிகமாகவும், பெரும்பான்மையானவர்களின் சம்பளத்தை அதே அளவிலுமே வைத்திருக்கிறது"

I had never think like this before (I was immpresed by common view), but i believe every one should know this.

7:26 AM, July 17, 2008
Ragztar said...

//பொருளாதாரத்தை முழுமையாக கம்யுனிசப் பார்வையில் பார்க்க முடியாது.//

எப்படி?

8:57 AM, May 22, 2009
Ragztar said...

//பொருளாதாரத்தை முழுமையாக கம்யுனிசப் பார்வையில் பார்க்க முடியாது.//

ஏன் ? எப்படி ?

11:40 AM, May 22, 2009
ஸ்வாதி said...

இன்று தான் இந்த வலைப்பூவை படிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. ஒரு நாள் முழுக்க கணனியைவிட்டு அகலாமல் இருந்து படித்தேன். இலகுவாக புரியுமளவுக்கு தமிழில் வாசிக்கக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி . ஆனாலும் மிகுதி தொடராமல் விட்டுவிட்டீர்கள் போல் உணர்கிறேன். வருத்தமளிக்கிறது. இந்த வலைப்பூவில் இது தான் கடைசிப் பதிவா? 2 வருடத்துக்கு முந்தைய திகதி காட்டுகிறது. இதன் தொடர்ச்சி இனி எப்போது வரும்?? :(

அன்புடன்
சுவாதி

7:55 AM, June 09, 2009
dsfs said...

பங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1

http://ponmalars.blogspot.com/2009/08/blog-post.html

12:53 AM, August 08, 2009