பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Wednesday, March 09, 2005

அமுதசுரபி - நிதிச் சிறப்பிதழ்



இம் மாத அமுதசுரபி இதழ், நிதிச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. பல நல்ல கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

பங்குச்சந்தை பற்றிய எளிய அறிமுகமாக பங்குச்சந்தை - உள்ளும், புறமும் என்ற எனது கட்டுரையும் வெளிவந்துள்ளது

1 மறுமொழிகள்:

Anonymous said...

தமிழச்சி!

மிக மிக தாமதமாக தங்கள் பதிவுக்கு பின்னூட்டம் தருகிறேன். முதலில் இது குறித்து எனது வருத்தம். ஆனால் ஏற்கெனவே சொன்னபடி, தங்களது அமுதசுரபி கட்டுரையைப் படிக்காமல் எழுதக்கூடாது என்று நான் நினைத்ததுதான் காரணம். பல்வேறு சூழலால், நேற்று இரவுதான் உங்களது கட்டுரை உட்பட இன்னும் இரண்டு கட்டுரைகளை மட்டும் படித்தேன். உள்ளார்ந்தபடி சொல்வதானால், அந்த சில பக்கங்களிலேயே நீங்கள் பங்குசந்தையின் எவ்வளவு விரிந்த விஷயங்களைப் பேச முயன்றிருக்கிறீர்கள் என்பதைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. ஆனால் அந்த limitக்குள் சிறப்பாக செய்திருப்பதாகவே சொல்வேன்.

இங்கே blog போன்ற பரந்த தளம் கிடைக்கும்போது உங்களது எழுத்தின் செழுமைக்கும், பக்க லிமிட்டுக்குள் எழுதும்போது சந்திக்கும் நெருக்கடிக்கும் உள்ள வித்தியாசத்தை நான் உங்களது எழுத்தில் உணர்ந்தேன். படைப்பாளியான நீங்களும் உணர்ந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். Stock market index பற்றி எவ்வளவு சுருக்கமாக சொல்லிவிட வேண்டிய அவசியம் உங்களுக்கு இருந்தது என்று உணர்ந்தபோது, அதைப்பற்றி மட்டுமே 2 முழு பக்க அளவில் 'புதிய பார்வை'யின் கடந்த இதழ்களில் நான் எழுதிய கட்டுரையை இங்கே தரலாம் என்று தோன்றியது.

இந்த வேலைக்கு இன்னொரு காரணமும், காரணரும் உண்டு. அவர், அண்ணாகண்ணன். அமுதசுரபியின் பொறுப்பாசிரியர்தான். 'நமது பழைய படைப்புகளையும், ஒரே இடத்தில் சேர்த்து வைக்க, நாம் இந்த blogகைப் பயன்படுத்திக் கொள்ளலாம்' என்று Idea தந்தவர் அவர்தான்.

இந்த இரண்டு காரணங்களால் index பற்றிய அந்த கட்டுரையை இன்று பதிக்கிறேன். அடுத்து, உங்களுக்கு ஏற்கெனவே வாக்களித்திருந்தபடி பட்ஜெட் பற்றிய எனது கட்டுரையை நாளை, அதாவது 16ந்தேதி - வரும் இதழ் புதிய பார்வை சந்தைக்கு வந்ததும் இங்கே தருகிறேன்.

- சந்திரன்

1:48 AM, March 15, 2005