பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Monday, March 07, 2005

பட்ஜெட் 2005 - பட்ஜெட்டும் பங்குச்சந்தையும்



பட்ஜெட் நாளன்று, பங்குச்சந்தை சரிய வேண்டும். இது தான் கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் எழுதப்படாத நியதி. இந்த ஆண்டு ஒரு மாற்றம். பங்குச்சந்தை பட்ஜெட் தினத்தன்று 144 புள்ளிகள் எகிறியது.

கடந்த ஆண்டை தவிர சிதம்பரத்தின் ஒவ்வொரு பட்ஜெட்டையும் பங்குச்சந்தை ஆரவாரமாய் வரவேற்கவேச் செய்துள்ளது. கடந்த ஆண்டு கூட பங்குப் பரிவர்த்தனை வரி (STT) என்ற வரியாலேயே பங்குச்சந்தை சரிந்தது. மற்றபடி அது கூட ஒரு சிறப்பான பட்ஜெட் தான்.

பட்ஜெட்டுக்குப் பிறகு பங்குச்சந்தையின் ஏற்றம் மிக அதிகமாக இருக்கும் என்று பல நிபுணர்கள் கருதுகின்றனர். மும்பை பங்குச்சந்தை குறியீடு, BSE, இந்த வருட முடிவில் 8000ஐ எட்டும் என்று மார்கன் ஸ்டேன்லி (Morgan Stanley) நிறுவனம் கணித்துள்ளது. இதை விட ஆச்சரியம் அடுத்த பத்தாண்டுகளில் குறியீடு 25,000 எட்டும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

குறியீடு உயர வேண்டுமானால் பங்குச்சந்தைக்கு பணம் குவிய வேண்டும். பணம் குவியவிருக்கும் சில வழிகளைப் பற்றி இவ் வார தமிழோவியம் பங்குச்சந்தை பார்வையில் - எகிறப் போகும் பங்குச்சந்தை என்ற கட்டுரையில் எழுதியுள்ளேன்.


2 மறுமொழிகள்:

Anonymous said...

சசி,

சனிக்கிழமைதான் எனது பழைய நிறுவனமான விகடன் நண்பர்கள் சிலரிடமும் மற்றவர்கள் சிலருடன் இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். நீங்கள் தமிழோவியம் இணைய இதழில் இந்த வாரக் கட்டுரையில் எழுதியிருக்கும் சில கருத்துகள் குறிப்பாக - உள்ளூர் சேமிப்பை வளர்த்து, அதை பங்கு சந்தைக்கு மடை மாற்றும் ஒரு Hiden agendaவே இந்த பட்ஜெட்டில் இருக்கிறதோ என்று நான் நம்புகிறேன் என்று அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அதற்கு ஆதாரமாக இன்னும் சில விஷயங்களையும் நான் குறிப்பிட்டிருந்தேன். இவையெல்லாம் நான் 'புதிய பார்வை' மார்ச் 15 தேதியிட்ட இதழுக்கு பட்ஜெட் பற்றி எழுதம் கட்டுரையில் இடம் பெற இருக்கின்றன. எனவே இதற்கு மேல் இங்கு அவற்றைப் பரிமாறிக் கொள்வது ethically சரியாக இருக்காது என்பதால் அந்த எனது கட்டுரையை வரும் 16ந்தேதி எனது வலைபதிவில் தருகிறேன். எனினும் தங்களது கட்டுரை நன்றாகவும், எதிர்கால போக்கு பற்றிய அடிப்படையுடன் கூடிய கணிப்பு என்பதிலும் சந்தேகமில்லை. அமுதசுரபியில் தாங்கள் எழுதிய கட்டுரையை படிக்க அதையும் வாங்கி வைத்துள்ளேன். படித்துவிட்டு வந்து நாளை மறுபடியும் இங்கே கருத்து பரிமாறுகிறேன். தொடர்க உங்கள் பணி! இத்துறை பற்றி எழுத மிகக்குறைவான ஆட்களே இருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தது - முதலிடும் ஆட்களின் எண்ணிக்கை மௌ஢ள மௌ஢ள அதிகரித்து வருவது போல - அதிகரித்து வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி!
- சந்திரன்

8:15 AM, March 07, 2005
Anonymous said...

சந்திரன்,

உங்கள் கருத்துக்கு நன்றி. உங்கள் கருத்துக்களையும், பட்ஜெட் பற்றிய பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

சசி

3:39 AM, March 09, 2005